Sunday, January 8, 2012

தமிழ் என்னவாகும்?

அனைவருக்கும் என் வணக்கம்!
இது என்னுடைய முதல் தமிழ் பதிவு!
ஆகவே ஏதேனும் பிழை இருந்தால் அதை அன்பாக சுட்டி காட்டி என்னை வழி நடத்துங்கள்!

தமிழன் மட்டும் ஏனோ தெரியவில்லை தமிழில் பேசுவதை மானக்கேடான விஷயமாக நினைக்கிறான்....உயிரும்,மெய்யும் கலந்து சேர்த்த தமிழ் மொழி இப்பொழுது உயிருக்கு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது....

தன் பிள்ளை ஆங்கிலம் பேசுவதை நினைத்து பெருமைப்படுவதை நான் குறை கூறவில்லை.
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் 'கண்டிப்பாக பெருமைப்படும் செயல் தான்...ஆனால் என் பிள்ளைக்குத் தமிழ் பேச தெரியாது என்று மார்த்தட்டும் தமிழனை நினைத்தால் எனக்கு ஆத்திரம் வரும்...'இவன் போன்ற தமிழ்மகனை(!) நினைத்து தான் பாரதியார் "தமிழ் இனி மெல்ல சாகும்" என்று பாடினார் போல'...

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும்,வெளிநாட்டில் வாழூம் தமிழர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு எங்கேத் தன் தமிழ் பண்பாடுப் பற்றித் தெரியாமல் போய் விடுமோ என்று எண்ணி தமிழ் கலாசாரத்தை பயில வைக்கிறார்கள்....எனக்கு தெரிந்து அமெரிக்காவில் வாழூம் என் உறவினர்கள்,நண்பர்களின் உறவினர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டின்
பெருமை மிக்க நடனக்கலையான பரதநாட்டியம்,கர்நாடக இசை ஆகியவற்றை கற்றுத் தருகிறார்கள்.ஆனால் இங்கு வாழூம் பிள்ளைகள் மேற்கத்திய சங்கீதம் கற்றால் தான் சமுதாயத்தில் மதிப்பார்கள் என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்...அவர்களைச் சொல்லி குற்றமில்லை.....சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு Rhymesஉம்,Poemsஉம் சொல்லி தரும் நாம்(இங்கு என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்...இதற்கு நான் வெட்கித் தலைக் குனிகிறேன்)
ஆத்திசூடி,திருக்குறள் சொல்லி தர ஏனோ மறுக்கிறோம்...

இப்படியே சென்றால் என் தமிழ் மொழி என்னவாகும்?
செம்மொழி மாநாடு நடத்தினால் மட்டும் போதாது....தமிழ் மொழியை பாடமாக கற்றுக் கொடுத்தால் வெறுப்புத் தான் வரும்,அதை அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக் கற்று கொடுங்கள்....அப்பொழுது தான் என் தமிழும்,எதிர்காலத் தமிழ் மக்களும் உலக அரங்கில் உயர்ந்து வாழ்வார்கள்...

நன்றி....
வணக்கம்....

3 comments:

  1. everything was good but there is a mistake in ur,,,tamil word in தமிழுளும்....because the correct spelling is தமிழும் ....tha a the correct form

    ReplyDelete
  2. வாழ்த்துகள். தமிழ் பதிவுலகிற்கு வருக!

    ReplyDelete
  3. //அப்பு
    வாழ்த்துகள். தமிழ் பதிவுலகிற்கு வருக!//

    நன்றி அப்பு அவர்களே!

    ReplyDelete