வணக்கம்,
இன்று பொங்கல் திருநாளா இல்லைத் தமிழ்ப் புத்தாண்டா என்றக் குழப்பம் நீடிக்கும் நிலையில், எதுவாக இருந்தாலும் இன்று 'தமிழர்த் திருநாள்' என்று எடுத்து கொண்டு இந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்...
காலை 5 ம்ணிக்கு எழுந்து சூரியக் கடவுளை வணங்கி,பெரியவர்களிடம் ஆசி பெற்று இந்த வருடம் நல்ல வளம்மிக்க வருடமாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இந்த நாளை எப்படி செலவிடப் போகிறோம் என்று என் எண்ண அலைகளை மிதக்க விட்டேன்.....
5 நாட்கள் விடுமுறை என்பதால் கல்லூரியிலும் பெரிதாக செய்து முடிப்பதற்கு வேலைகள் இல்லை...
சரி அப்போ இன்னைக்கு செம சந்தோஷமாக நாளை கழிக்கலாம் என்று உள்ளம் மகிழ்ந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்தேன்....அது என்னை பார்த்து 'என்னை விட்டால் உனக்கு வேறு என்ன பொழுது போக்கு' என்று ஏளனமாக சிரித்தது...
உண்மைதான்,
தொலைக்காட்சி மட்டுமே பொழுது போக்கு என்று ஆகிவிட்ட நிலையில் ,எனக்கு மட்டும் விதி விலக்கா என்ன?
எந்திரன் நம்மை பிற்காலத்தில் ஆழ்வான, இல்லையா என்பது வேறு விஷயம்,ஆனால் இன்று ரஜினியின் எந்திரன் கண்டிப்பாக அனைவரது இல்லதிலும் குடி இருப்பார்.கதை தரம் சற்று குறைவாக இருந்தாலும் கதையின் கரு அருமையானது...அதற்காகவே அந்த திரைப் படத்தை பார்க்கலாம்...
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் கண்டிப்பாக குடும்ப அமைப்பின் சிக்கல்கள் பற்றி தான் இருக்கும்......அவரும் சரியான தீர்ப்பைத் தான் வழங்குவார்..
லியோனி பாடல்களை வைத்தே தன் பட்டிமன்றத்தை நடத்தி விடுவார்....
பின்னர் masala programs என்று அழைக்கப்படும் துக்கடா நிகழ்ச்சிகள் வரும்....அதை நேரம் கடத்தும் சாதனமாக எண்ணி கொண்டு இரவு வரை கழித்து விட்டு நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி செல்வேன்.......
இது வெறுப்பை தந்தாலும் வேறு வழியில்லை.....
ஊரோடு ஒத்து வாழக் கத்து கொண்டு தான் ஆக வேண்டும்.....
'Be a roman while in Rome'
என் எண்ணங்கள்
Saturday, January 14, 2012
Sunday, January 8, 2012
தமிழ் என்னவாகும்?
அனைவருக்கும் என் வணக்கம்!
இது என்னுடைய முதல் தமிழ் பதிவு!
ஆகவே ஏதேனும் பிழை இருந்தால் அதை அன்பாக சுட்டி காட்டி என்னை வழி நடத்துங்கள்!
தமிழன் மட்டும் ஏனோ தெரியவில்லை தமிழில் பேசுவதை மானக்கேடான விஷயமாக நினைக்கிறான்....உயிரும்,மெய்யும் கலந்து சேர்த்த தமிழ் மொழி இப்பொழுது உயிருக்கு போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது....
தன் பிள்ளை ஆங்கிலம் பேசுவதை நினைத்து பெருமைப்படுவதை நான் குறை கூறவில்லை.
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் 'கண்டிப்பாக பெருமைப்படும் செயல் தான்...ஆனால் என் பிள்ளைக்குத் தமிழ் பேச தெரியாது என்று மார்த்தட்டும் தமிழனை நினைத்தால் எனக்கு ஆத்திரம் வரும்...'இவன் போன்ற தமிழ்மகனை(!) நினைத்து தான் பாரதியார் "தமிழ் இனி மெல்ல சாகும்" என்று பாடினார் போல'...
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும்,வெளிநாட்டில் வாழூம் தமிழர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு எங்கேத் தன் தமிழ் பண்பாடுப் பற்றித் தெரியாமல் போய் விடுமோ என்று எண்ணி தமிழ் கலாசாரத்தை பயில வைக்கிறார்கள்....எனக்கு தெரிந்து அமெரிக்காவில் வாழூம் என் உறவினர்கள்,நண்பர்களின் உறவினர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டின்
பெருமை மிக்க நடனக்கலையான பரதநாட்டியம்,கர்நாடக இசை ஆகியவற்றை கற்றுத் தருகிறார்கள்.ஆனால் இங்கு வாழூம் பிள்ளைகள் மேற்கத்திய சங்கீதம் கற்றால் தான் சமுதாயத்தில் மதிப்பார்கள் என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்...அவர்களைச் சொல்லி குற்றமில்லை.....சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு Rhymesஉம்,Poemsஉம் சொல்லி தரும் நாம்(இங்கு என்னையும் சேர்த்துக் கொள்கிறேன்...இதற்கு நான் வெட்கித் தலைக் குனிகிறேன்)
ஆத்திசூடி,திருக்குறள் சொல்லி தர ஏனோ மறுக்கிறோம்...
இப்படியே சென்றால் என் தமிழ் மொழி என்னவாகும்?
செம்மொழி மாநாடு நடத்தினால் மட்டும் போதாது....தமிழ் மொழியை பாடமாக கற்றுக் கொடுத்தால் வெறுப்புத் தான் வரும்,அதை அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக் கற்று கொடுங்கள்....அப்பொழுது தான் என் தமிழும்,எதிர்காலத் தமிழ் மக்களும் உலக அரங்கில் உயர்ந்து வாழ்வார்கள்...
நன்றி....
வணக்கம்....

Subscribe to:
Comments (Atom)